Menu

ரஜினிகாந்த்

இன்னும் கட்சியும் ஆரம்பிக்கல.. போர் வரட்டும்.. போர் வரட்டும்னு சொல்லிக்கிட்டு தான் இருக்கார்… போனது ஒரே ஒரு பொது நிகழ்ச்சி.. அங்கேயே அவ்வளவு கோபம்… நிதானம் இல்ல.. கட்சி கொள்கைன்னு அறிவிக்கட்டும் … வெறும் காத்துலயே அவர் கம்பு சுத்திட்டு இருக்கார்.1 ஜனவரி 2018 ல – 234 தொகுதியிலேயும் தனியா நிற்போம் அப்படின்னு சொன்ன போது ரொம்ப மகிழ்ச்சியா தான் இருந்தது.. தனி ஆளா வந்து அசரடிக்க போறார் அப்படின்னு ரொம்ப பெருமையா தான் இருந்தது..ஆனா இன்று வரை… எதையாவது தெளிவா சொல்றாரா ? ஸ்டாலின், திருமா, அன்புமணி எல்லாரும் நல்ல தலைவர்கள் அப்படின்னார்… சரி.. தமிழ்நாட்ல சிஸ்டம் சரியில்ல அப்படின்னார்… சரி.. ஓகே.. ADMK அரசாங்கம் சரியில்ல அப்படின்னு சொல்றார் போல இருக்கு அப்படின்னு நினைச்சு admk அமைச்சர்கள் எல்லாம் பதில் சொன்னாங்க… இப்போ தூத்துகுடில முதலமைச்சர் பதவி விலக தேவையில்லை அப்படிங்கிறார்… .  இன்னும் அவருக்கே என்ன செய்றதுன்னு தெரியாம குழம்பி போய் மறுபடியும் இமயமலை போக போறார் அப்படின்னு நியூஸ் வருது.. அரசியல் எல்லாம் இப்படி பண்ணினா நாலா பக்கமும் அடிப்பாங்க எப்போதும் அவர் சூப்பர் ஸ்டார் தான்.. சினிமாவில் … அரசியலில் அல்ல.. அவரு பேர் சில பேருடைய சுயநலனுக்காக கெட்டு குட்டி சுவர் ஆயிட்டு இருக்கு.. ரஜினியோட பலமே அவரோட இமேஜ் தான்.. அதை கெடுக்க நிறைய பேர் புறப்பட்டு இருக்காங்க… அவரு வரட்டும்.. ரஜினியா வரட்டும்.. தன்னோட குரலோட வரட்டும்.. மத்தவங்க குரலா இல்லை.. அப்படி மத்தவங்க குரலா வந்தா , அவருக்கு பரிதாப பட தான் முடியும்.