Menu
0 Comments

சோ -சிம் –சோசியம் — ஆண்டு 1989 – தேசிய முன்னணி அரசாங்கத்தில் யார் பிரதமராக போகிறார் என்று ஒரு குழப்பமான நேரம்… … திரு கருணாநிதியும் சோ ராமஸ்வாமியும் ஒரே விமானத்தில் டெல்லி செல்கிறார்கள்.. கருணாநிதி செல்வது விபி சிங்கை ஆதரிக்க … சோ செல்வது சந்திரசேகருக்கு ஆதரவு திரட்ட.. நேர் எதிர் நிலை இருவருக்கும்…சோ திரு. கருணாநிதியை கடுமையாக அப்போது விமரிசித்து கொண்டு இருக்கிறார்… . ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொள்கிறார்கள்.. சோ என்ன நடக்கும் டெல்லியில் என கேட்கிறார்.. அதற்கு கலைஞர் .. எல்லாரும் “சோசியம்” தானே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்… சோ குழம்பி போய் என்ன சொல்கிறீர்கள் என கேட்க … கலைஞர் சிரித்துக்கொண்டே” ஆமா.. நீங்க “சோ” .. நான்.. “சிம் ” நாம சேர்ந்தால் சோ -சிம் –சோசியம் … நாம என்ன பண்ணுவோம் என்று தானே தமிழகத்தில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சிலேடையாக கூறுகிறார்.. இந்த நிகழ்வை சோ ராமஸ்வாமி ஒரு துக்ளக் கட்டுரையில் எழுதி இருந்தார்… எந்த ஒரு நெருக்கடியான நேரத்திலும் நகைச்சுவை உணர்வை மிக அழகாக வெளிப்படுத்துவதில் கலைஞர் திறமையானவர் என்று பாராட்டி எழுதி இருந்தார்.. கலைஞரை போன்று வார்த்தைகளை வைத்து விளையாடுபவர்கள் யார் இருக்கிறார் இன்று? பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலைஞர் அவர்களே!!

1 thought on “சோ-வும் கருணாநிதியும் – அது ஒரு காலம்!”

  1. Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Comments are closed.